Latestமலேசியா

ஈப்போவில் நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்; நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல அமைப்புக் கோரிக்கை

ஈப்போ, செப்டம்பர்-29,

பேராக், ஈப்போவில் நாயொன்று கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீஸாருக்கும் கால்நடை சேவைத் துறைக்கும் புகார் அளிக்குமாறு, விலங்குகள் நல அமைப்பொன்று சாட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் 90 வினாடி வீடியோவில், ஓர் ஆடவர் இரும்புக் கம்பியால் நாயை அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அவரை ஒரு பெண் தடுக்க முயன்றபோதும், அவரால் அது முடியாமல் போனது.

பின்னர், நாய் காயமடைந்து இரத்தம் சிந்திய நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில், SAFM என்ற அவ்வமைமைப்பு, சந்தேக நபர் நாயின் உரிமையாளரின் மகனாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

அந்நாய் இறந்துவிட்டதையும் அது உறுதிச் செய்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி, காரணமானவர்களை விரைவாகச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!