
ஈப்போ, செப்டம்பர்-30,
ஈப்போ அருகே செமோர், கம்போங் குவாலா குவாங் பகுதியில் தனது மனைவியை கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது மியன்மார் நாட்டு ஆடவர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் அவ்வாடவர், தனது 28 வயது மனைவி மயக்க நிலையில் இருப்பதாகவும், அம்புலன்ஸ் வண்டியைத் தொடர்பு கொள்ள உதவி கேட்கவும் போலீசுஸுக்கு அழைத்தார்.
பின்னர் பிற்பகல் 3.40 மணியளவில் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அப்பெண் கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்நபர் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டார்.
உடல், பிரேத பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கொலைக்கானக் காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.