
தெஹ்ரான், ஜூலை-9-கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி எனக் கூறி, ஈரான் ஆதரவு பெற்ற இலக்குகள் மீது அமெரிக்கா புதியத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாஷிங்டன் கூறியது.
தனது படைகள் மற்றும் நட்பு நாடுகளின் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், வட்டாரத்தில் கடல்வழி வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்கவும் இந்தத் தாக்குதல்கள் அவசியம் என Pentagon தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் இந்த மோதல் போக்கு, உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இராணுவ நடவடிக்கைகள் வட்டார அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அனைத்துலக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.



