
புது டெல்லி – ஆகஸ்ட்-19 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக இம்மாத இறுதியில் சீனா பயணமாகிறார்.
Tianjin-னில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.
புது டெல்லியில் இன்று சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த பிறகு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் (Ajith Doval) அதனை அறிவித்தார்.
இரு வழி அரச தந்திர உறவில் புத்தெழுச்சியை ஏற்படுத்தும் வகையில் மோடியின் இப்பயணம் அமையும் என்றார் அவர்.
இவ்வேளையில், மோடியின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) கூறினார்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட அவ்விருநாடுகளும், தெற்காசியாவில் செல்வாக்கை நிலைநாட்டுவதில் தீவிர போட்டியாளர்களாக உள்ளன; 2020-ஆம் ஆண்டு ஒரு மோசமான எல்லை மோதலிலும் அவை ஈடுபட்டன.
அதே சமயம், சீனாவுக்கு எதிர்ப்பாகக் கருதப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றுடன் Quad பாதுகாப்பு கூட்டணியில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.