Latestமலேசியா

உலக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எல்பிஎஸ் தலைவர் லிம் ஹொக் சான்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 4 – எல்பிஎஸ் பினா குழுமத்தின் (LBS Bina Group Berhad) நிர்வாகத் தலைவர் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் லிம் ஹாக் சான் (Tan Sri Dato’ Sri Ir. (Dr.) Lim Hock San), உலக சிறந்த தொழில்முனைவோர் வாழ்நாள் சாதனையாளர் விருது (World Outstanding Entrepreneur Lifetime Achievement Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, World Business Chamber-இன் உலக ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை தலைமைத்துவம், தொழில்முனைவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரிலுள்ள ஷாங்ரி- லா (Shangri – La) ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் துன் ஸ்ரீ செத்தியா டாக்டர் ஹாஜி முகமட் அலி பின் முகமட் ருஸ்தாம் (Tun Seri Setia Dr. Haji Mohd Ali Bin Mohd Rustam) மற்றும் துன் டத்தோ ஸ்ரீ சாக்கி துன் அஸ்மி (Tun Dato’ Seri Zaki Tun Azmi) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விருதைப் பெற்றதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த லிம் ஹொக் சான், இந்த அங்கீகாரம் எல்பிஎஸ் குடும்பத்தினர், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும், உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நிலையான வணிக வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!