உலுத் திராமில் தெரு நாய் மீது வாகனத்தை மோதிய ஓட்டுநர்; கடும் நடவடிக்கை எடுக்க SAFM வலியுறுத்து

உலுத்திராம், மே 20 – ஒரு பிக்கப் டிரக் ஓட்டுநர் வேண்டுமென்றே தெருநாய் மீது மோதியதாகக் காட்டப்படும், வைரலான CCTV காணொளி, இணையத்தள வாசிகளிடையே பல்வேறு எதிர்விணையை தூண்டியுள்ளது.
உலுத் திராம் தாமான் புத்ரி வாங்சாவில் நடந்ததாகக் கூறப்படும் இந்தக் கொடூரச் செயல் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என SAFM எனப்படும் கைவிடப்பட்ட பிராணிகள் சங்கத்தின் தலைவர் ஆர். கலைவாணன் வலியுறுத்தினார்.
மே 15 ஆம் தேதியன்று காலை மணி 11.24 க்கு நடந்ததாக நம்பப்படும் இந்தச் செயலை SAFM வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜோகூர் பாரு மாநகர் மன்றம் மற்றும் போலீஸ் உட்பட காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர், விலங்குகள் நலச் சட்டம் 2015 (சட்டம் 772) மற்றும் பொருந்தமான பிற சட்டங்களின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என SAFM அழைப்பு விடுத்துள்ளது.
சம்பவத்தின் போது வாகனத்தைப் பயன்படுத்திய ஓட்டுநர், வாகன உரிமையாளர் மற்றும் அதற்குப் பொறுப்பான தரப்பினரை அவர்கள் அடையாளம் காண வேண்டும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் காலைவாணன் தெரிவித்தார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் தங்களது தரப்பு புகாரை பெற்றுள்ளதாக
ஜோகூர் பாரு மாநகர் மன்ற செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.



