உலு சிலாங்கூர், நவம்பர்-30, வரிப் புலியின் கால் தடம் கண்டறியப்பட்டதை அடுத்து, சிலாங்கூர், உலு பெர்ணாமில் உள்ள தோட்டமொன்றில் அதனைப் பிடிப்பதற்காக பொறி கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
அது தவிர்த்து, அங்கு அடிக்கடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதோடு, தோட்டப் பகுதியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க CCTV கேமராவும் பொருத்தப்பட்டிருப்பதாக, PERHILITAN எனப்படும் வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் சிலாங்கூர் கிளை கூறியது.
நவம்பர் 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு தோட்டத்தில் தேங்காய் சேகரித்து கொண்டிருந்த தோட்டக்காரர், புலியின் கால் தடத்தைக் கண்டார்.
புக்கிட் காடிங் (Bukit Gading) பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள அத்தோட்டத்தில் பன்றிகளின் கால் தடங்களும் ஏராளமாக இருக்கின்றன.
அதுவே கூட புலியின் நடமாட்டத்துக்கு காரணமாக இருக்கலாமென PERHILITAN கூறியது.
இந்நிலையில் காட்டு விலங்குகளை நேரில் கண்டால் கவனமாக இருப்பதோடு, சொந்தமாக நடவடிக்கையில் இறங்க வேண்டாமென கேட்டுக் கொண்டது.