Latestமலேசியா

எல்மோ உடையில் வந்த மர்ம நபரால் ஆடவர் தாக்கப்பட்ட சம்பவம்; வைரல் வீடியோ குறித்து மலாக்கா போலீஸ் விசாரணை

மலாக்கா, மே-15, பிரபல Sesame Street கார்டூன் கதாபாத்திரமான Elmo போல பொம்மை உடையில் கடை வீதியில் ஒருவரை அடித்துக் காயப்படுத்திய நபரை மலாக்கா போலீஸ் தேடி வருகிறது.

Banda Hilir-ரில் உள்ள பேரங்காடியொன்றில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவத்தின் காணொலி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

எனினும் போலீசில் இதுவரை புகாரேதும் செய்யப்படவில்லை என மலாக்கா தெங்ஙா போலீஸ் தலைவர் Christopher Patit கூறினார்.

வைரலாகியுள்ள அக்காணொலி பழையதா அல்லது புதியதா என்பதை உறுதிச் செய்ய வேண்டியுள்ளது.

புதியது என கண்டறியப்பட்டால், புகார் பதிவுச் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பேரங்காடியின் கடை வீதி சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்கும் ஆடவரை, Elmo உடையில் வந்த நபர் முகத்தில் குத்துவது வைரல் காணொலியில் தெரிகிறது.

மிரட்டும் தோரணையில் கத்துவதோடு, தகாத வார்த்தைகளாலும் அவரை அந்த Elma ஆசாமி திட்டி விட்டு அங்கிருந்து நகருகிறார்.

எனினும் அடி வாங்கிய நபர் பதில் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை.

அச்சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்களில் ஒருவர் அதனைக் கைப்பேசியில் பதிவுச் செய்து வைரலாக்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!