Latestஇந்தியாஉலகம்

எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்க முயன்ற இந்திய மலையேறி உயிரிழந்தார் ; இப்பருவத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ள எட்டாவது மரணம்

காத்மாண்டு, மே 29 – எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மலையேறி ஒருவர் உயிரிழந்ததை, நேப்பாள சுற்றுலாத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு எவரெஸ்ட் மலையேறும் பருவத்தில் பதிவுச் செய்யப்பட்டிருக்கும் எட்டாவது மரணம் அதுவாகும்.

46 வயது பான்சி லால் எனும் அந்த மலையேறி, கடந்த வாரம் எவரெஸ்ட் மலையிலிருந்து மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததை, நேப்பாள சுற்றுலா துறை அதிகாரி ராகேஷ் கூருங் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாண்டுக்கான எவரெஸ்ட் மலையேறும் பருவம் முடிவடையவுள்ள வேளை ; அந்த மரணம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

எனினும், கடந்தாண்டு எவரெஸ்ட் மலையேறும் பருவத்தில் பதிவுச் செய்யப்பட்ட 18 உயிரிழப்புகளை காட்டிலும் இவ்வாண்டு குறைவான மரணச் சம்பவங்களே பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

எட்டாயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட எவெரஸ்ட் சிகரத்தின், எட்டாயிரம் மீட்டருக்கு மேலே பிராணவாயு குறைந்து காணப்படும் பகுதியில் தான் அதிகமான மரணங்கள் பதிவுச் செய்யப்படுவது வழக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!