Latestமலேசியா

ஏஷாவை இணையப் பகடிவதைக்கு ஆளாக்கிய அதே நபர்களால் 2 செய்தியாளர்களும் பாதிப்பு

சுபாங் ஜெயா, ஜூலை-9, சமூக ஊடக பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரியை இணையப் பகடிவதைக்கு ஆளாக்கிய அதே நபர்களால் செய்தியாளர்கள் இருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அது குறித்து இருவரும் தம்மிடம் முறையிட்டதை தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர்களின் வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு அக்கும்பல் மிரட்டியுள்ளது.

இதனால் அவ்விரு செய்தியாளர்களும் அப்போது பெரும் அச்சமடைந்தததாக ஃபாஹ்மி சொன்னார்.

மிரட்டல் விடுக்கும் அளவுக்கெல்லாம் சென்றால் அது வெறும் பகடிவதை மட்டுமல்ல, குற்றவியல் அம்சங்கள் கீழும் வந்து விடுமென அவர் சொன்னார்.

இப்படி பகடிவதையில் ஈடுபடுவோர் பெரும்பாலும் போலி கணக்குகளின் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் அவர்களை சிக்க வைப்பது பெரும் சவாலாக இருப்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டார்.

தம் மீது அவதூறு பரப்பப்பட்டு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறி போலீசில் புகார் செய்த மறுநாளே, ஏஷா தனது வீட்டில் இறந்துக் கிடந்தது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இணையப் பகடிவதையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியே ஏஷா தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படும் நிலையில், விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேக நபரான 35 வயது பெண் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!