Latestஉலகம்

ஒசாகா புறப்பட்ட போது இயந்திரத்தில் தீ; அவசரமாகத் தரையிறங்கிய ஜப்பானிய விமானம்

தோக்யோ, ஜூன்-23, ஜப்பானின் ஒசாகா ( Osaka) நகருக்குப் பயணமான Japan Airlines விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடித்ததால், Aomori அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பி அது அவசரமாகத் தரையிறங்கியது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை 1.15 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

JAL 2154 விமானம் 47 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஒசாகா அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி பயணமானது.

அப்போது இடது புற இயந்திரத்தில் இருந்து தீப்பொறி கிளம்பியதால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

பயணிகள் அனைவரும் பின்னர் இரு வேறு விமானங்கள் மூலமாக பத்திரமாகப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

விமான இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!