Latestமலேசியா

ஒன்லைன் வங்கி பரிவர்த்தனை மோசடி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 166,000 ரிங்கிட் வழங்கும்படி மே பேங்கிற்கு உத்தரவு

கோலாலம்பூர், மே 12 -ஒரு பெண்ணின் கணக்கிலிருந்து பணத்தைக் காலி செய்த சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளைத் தடுக்கத் தவறியதற்காக, அவருக்கு 166,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மே பேங்கிற்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டில், 47 வயதான அப்பெண்ணின் ஆன்லைன் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பல அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் பரிமாற்றங்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, வங்கி அலட்சியமாக இருந்தது என்று நீதிபதி மைமுனா அய்ட் ( Maimoonah Aid) தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, வாதியான சான் யான் லியின்( Chan Yan Li) வீட்டுக் கடன் கணக்கிலிருந்து முதலில் பணம் எடுக்கப்பட்டு, அவரது சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

பின்னர், 2021 ஆம் ஆண் ஜூன் 26 மற்றும் ஜூலை 2, ஆம் தேதிக்கிடையில் , பல மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்குகளுக்குப் அப்பணம் படிப்படியாக அனுப்பப்பட்டது.

அதே ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று , தனது Maybank2u கணக்கைச் சரிபார்த்தபோதுதான், இந்தப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை வாதி உணர்ந்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

தங்கள் Maybank2u அமைப்பில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், வாதியின் சொந்த அலட்சியத்தால் அவரது வங்கி விவரங்கள் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் வங்கி வாதிட்டது.

இருப்பினும், சான் ஒரு தீவிர இணைய வங்கிப் பயனர் அல்ல என்றும், கடன் அட்டைப் பணம் செலுத்துதல் அல்லது எப்போதாவது பணம் அனுப்புதல் போன்ற எளிய விஷயங்களுக்கு மட்டுமே அவர் பொதுவாக Maybank2u-ஐப் பயன்படுத்தினார் என்றும் நீதிபதி மைமூனா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

மேலும் வாதிக்கு செலவுத் தொகையாக 15,000 ரிங்கிட் வழங்கும்படியும் மேபேங்க் வங்கிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!