Latestமலேசியா

ஒருவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட EPF கணக்குகளை ஒன்றிணைக்க ஊழியர் சேம நிதி வாரியத்துக்கு அதிகாரம் உண்டு ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், ஜூன் 18 – ஒரு நபரின், ஒன்றுக்கும் மேற்பட்ட EPF கணக்குகளை ஒன்றிணைக்க, ஊழியர் சேம நிதி வாரியத்துக்கு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

1991- ஆம் ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்டம் மற்றும் அது தொடர்பான விதிமுறைகளில், குறிப்பிடத்தக்க தடை எதுவும் இல்லாததால், ஒருவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இணைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக, ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பில், நீதித்துறை ஆணையர் டாக்டர் சூங் இயோவ் சோய் (Dr Choong Yeow Choy) தெரிவித்தார்.

EPF ஊழியர் சேம நிதி வாரியத்திற்கு எதிராக எம். திவ்யா தொடுத்திருந்த வழக்கிற்கு பதிலளிக்கும் வகையில் நீதிமன்றம் அந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, திவ்யாவின் மறைந்த தந்தை எஸ்.மாச்சாப்பின் (S. Machap), 236 மற்றும் 036 என முடிவடையும் EPF கணக்குகளை ஒரே கணக்காக இணைக்க கூடாது என கோரி அந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

1995-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு முதலாம் தேதி, தனது புதிய அடையாள அட்டை எண்ணின் கீழ், 036 என்ற கணக்கில், மாச்சாப் ஊழியர் சேம நிதி வாரியத்தின் சந்தாதாரராக பதிந்து கொண்டார்.

எனினும், 1984-ஆம் ஆண்டு, மார்ச் பத்தாம் தேதி, அவர் ஏற்கனவே தனது பழைய அடையாள அட்டை எண்ணில் கீழ், 236 என்ற எண்ணை கொண்ட EPF கணக்கை வைத்திருந்தார்.

மாச்சாப் தனது 236 பழைய EPF கணக்கில் பணம் வைத்திருந்த வேளை ; அவரது 036 கணக்கில் பணம் எதுவும் இல்லை.

எனினும், வி.கே. தர்ஷாயினியை அவர் தனது 036 என்ற கணக்கிற்கு வாரிசாக நியமித்திருந்த வேளை ; 236 கணக்கிற்கு வாரிசுதாரர் எவரும் நியமிக்கப்படவில்லை.

அதனால், மாச்சாப்பின் அவ்விரு கணக்குகளையும் ஒன்றிணைக்கும் EPF-பின் முடிவையும், வாரிசுதாரரை தானியங்கு முறையில் நியமிக்கும் முடிவையும் எதிர்த்து திவ்யா வழக்கு தொடுத்திருந்தார்.

அவ்வாறு கணக்குகளை ஒன்றிணைக்கவும், வாரிசுதாரரை நியமிக்கவும் EPF-பிற்கு அதிகாரம் இல்லை என திவ்யா தனது தரப்பு வாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அவ்வாறு தானியங்கி முறையில் கணக்குகளை இணைக்கவும், வாரிசுதாரர் சட்டமுறைப்படி நியமிம்கப்பட்டவர் என்பதால், அவரை தானியங்கி முறையில் நியமிக்கவும் EPF-பிற்கு தடை எதுவும் இல்லை என ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்
று தீர்ப்பளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!