
அலோஸ்டார், ஜூலை 4 – கைதொலைபேசியில் விளையாடிக் கொண்டே ஒருவழிச் சாலையின் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும் ஒரு பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
அலோஸ்டார் Hutan Kampung டோல் சாவடிக்கு எதிரான ஒரு வழி சாலையின் எதிரே மோட்டார் சைக்கிளை ஒட்டிச் சென்ற அந்த பெண்ணின் நடவடிக்கை அவருக்கு மட்டுமின்றி சாலையின் இதர பயணர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என போலீசார் தெரிவித்தனர்.
அப்பெண்ணின் நடவடிக்கை துணிச்சலானதாக இருந்தாலும் தேவையற்ற ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்ற அதிருப்தியையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். இருப்பினும், அந்தப் பெண் எங்கு பயணம் செய்கிறாள் என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் அது Hutan Kampung டோல் சாவடிக்கு அருகே நடந்தது.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றபோதிலும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்போம் என்று கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர், துணை கமிஷனர் சித்தி நோர் சலாவதி சாத் தெரிவித்தார்.