Latestஅமெரிக்காஉலகம்

ஒரே இரவில் முழு ஈரானை அழிக்க முடியும்” – போர்நிறுத்த காலக்கெடு முடிவதற்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன், ஏப்ரல்-7-“ஒரே இரவில் முழு ஈரானையும் அழிக்க முடியும். அது நாளையே கூட நடக்கலாம்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால், மலேசிய நேரப்படி புதன்கிழமை காலை 8 மணிக்கு ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என நேற்று எச்சரித்திருந்த நிலையில், ட்ரம்ப் இப்புதிய எச்சரிக்கையை விடுத்தார்.

இதனிடையே வளைகுடாவில் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் உலக வல்லரசுகள் முன்வைத்துள்ள 45 நாள் போர்நிறுத்த யோசனை நல்ல முயற்சி என்றாலும் அது ‘போதுமானது அல்ல’ எனக் கூறி என ட்ரம்ப் அதனை நிராகரித்துள்ளார்.

போர்நிறுத்தம் ஏற்படுமா இல்லையா என்பதை தாம் ஒருவர் தான் முடிவுச் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அந்த உத்தேச போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கவே நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், ஈரானின் எண்ணெயை கைப்பற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் அதனை அமெரிக்கர்கள் விரும்புவார்களா என தமக்குத் தெரியவில்லை என்றார் அவர்.

மற்றொரு நிலவரத்தில் மலேசியாவின் முதல் எண்ணெய் கப்பல் Hormuz நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளது.

பெட்ரோனாஸ் நிறுவனம் வாடகைக்கு எடுத்த அந்த எண்ணெய் டாங்கி கப்பல், ஜோகூர் பெங்கெராங் நோக்கி பயணிக்கிறது.

இந்த அனுமதி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஈரான் அதிபர் இடையேயான பேச்சுவார்த்தையின் பலனாக கிடைத்துள்ளது.

ஈரானியத் தூதரகம், “நண்பர்களை மறக்க மாட்டோம்” எனக் கூறி மலேசியாவை பாராட்டியுள்ளது.

ஒருபுறம் உலகம் வளைகுடாவில் போரின் அச்சத்தில் இருக்க, மறுபுறம் மலேசியா தனது அரச தந்திர ஆற்றல் நீரூபித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!