கோலாலம்பூர், ஜூன் 24 – ஒற்றுமை அரசாங்கத்தின் பாஸ் இணையவிருப்பதாக வெளியான தகவலை DAP யின் தலைமைச் செயலாளர் Anthony Loke மறுத்தார். ஒற்றுமை அரசாங்கத்தின் பாஸ் கட்சி இணையக்கூடும் என வெளியான தகவலை தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்காவோ இல்லாத நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தின் பாஸ் இணைவது குறித்து பேச்சு எதுவும் நடத்தப்படவில்லை.
இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கக்கூடும் என அந்தோனி லோக் கூறினார். அதிகமாக பேச்சு நடந்துள்ளன என பாமி தெரிவித்திருந்தார். கூட்டரசு அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்குமிடையே பேச்சு நடந்துள்ளது. நான்கூட பாஸ் தலைவர்களை சந்தித்துள்ளேன். எனவே ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும்படி அவர்களுக்கு நான் அழைப்பு விடுத்தேனா என்று அந்தோனி லோக் வினவினார்.
அரசியல் காரணங்களுக்காக நாங்கள் சந்திப்பு நடத்தவில்லை. மாநில மற்றும் கூட்டரசு அரசாங்க ரீதியில் அதிகமாக பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் ஒற்றுமை அரசாங்கத்தில் பாஸ் இணையப்போவதாக தகவல் வெளியானது . எனினும் இதனை பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் Hadi Awang மறுத்திருந்தார்.