Latestஉலகம்விளையாட்டு
ஒலிம்பிக் போட்டி: ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் மலேசியாவின் லீ ஷி ஜியா அரையிறுதி ஆட்டத்தற்கு தேர்வு
பாரிஸ், ஆக 3 – பாரிஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவின் முன்னணி ஒன்றையர் பேட்மிண்டன் வீரரான லீ ஷி ஜியா அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியாட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரன டென்மார்க்கின் Anders Antonsen னை 53 நிமிடத்தில் 21- 12. 21 -15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் லீ ஷி ஜியா மிகவும் நிதானமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தார். உலகின் ஏழாம் நிலை ஆட்டக்காரராக கணிக்கப்பட்டுள்ள லீ ஷி ஜியா அரையிறுதி ஆட்டத்தில் தாலாந்தின் Kunialu Vitidsam முடன் மோதவிருக்கிறார்.