சாவ் பாவ்லோ, ஜூலை 27 – டெங்கிக் காய்ச்சலை ஒத்திருக்கும் ஓரோபூச் (Oropouche) காய்ச்சலால் உலகின் முதலிரு உயிரிழப்புகள் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளன.
அந்நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் மரணமடைந்திருப்பதை பிரேசில் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
மோசமான டெங்கிக் காய்ச்சலின் போது காணப்படும் அதே அறிகுறிகளை, மரணமடைந்த இருவரும் கொண்டிருந்தனர்.
அக்காய்ச்சல் தொற்றியதால் மேலுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அவற்றை உறுதிபடுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓரோபூச் காய்ச்சல் என்பது வெப்பமண்டல வைரஸ் தொற்று ஆகும்.
இது கொசு கடியின் மூலம் இரத்தத்திலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
அக்காய்ச்சல் தொடர்பில் பிரேசிலில் இந்த ஆண்டு இதுவரை மட்டுமே 7,236 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.