Latestமலேசியா

கடத்தலைத் தடுக்க கிளந்தானில் RON 95 பெட்ரோலைத் திரும்பத் திரும்ப வாங்கத் தடை

கோத்தா பாரு, ஜூன்-17 – RON 95 பெட்ரோலை மீண்டும் மீண்டும் நிரப்புவதற்கு கிளந்தானில் உள்ள அனைத்து எண்ணெய் நிலையங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகைப் பெறப்பட்ட அந்த பெட்ரோல் எண்ணெய் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமுலாக்கப் பிரிவின் புத்ராஜெயா கிளைத் துணைத் தலைமை இயக்குனர் ஷம்சுல் நிசாம் காலில் (Shamsul Nizam Khalil) அதனை உறுதிப்படுத்தினார்.

RON 95 பெட்ரோலை தாய்லாந்துக்குக் கடத்தும் நோக்கில், அதனைத்
திரும்பப் திரும்ப வாங்கி சேமித்து வைக்கும் செயல் வெளிச்சத்துக்கு வந்திருப்பதை அடுத்து அவ்வுத்தரவு பறந்திருக்கிறது.

உள்நாட்டு பதிவு எண் பட்டைகளைக் கொண்ட வாகனங்களில் அந்த RON 95 பெட்ரோலை முழுமையாக நிரப்புவதை அவர்கள் யுக்தியாகக் கொண்டுள்ளனர்.

தற்சமயம் கிளந்தானை மட்டுமே அத்தடை உட்படுத்தியுள்ளது.

பின்னர், அதன் எல்லை மாநிலங்களான பெர்லிஸ், கெடா, பேராக் ஆகியவற்றுக்கு அது விரிவுப்படுத்தப்படலாம் என நிசாம் சொன்னார்.

உண்மையில், இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானிய முறை அமுலுக்கு வருவதற்கு முன்பே அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!