Latestமலேசியா

கடுமையான மழையினால் Lata Iskandar நீர் வீழ்ச்சியில் பெருக்கு

ஈப்போ, மே 14 – பேரவிலுள்ள Lata Iskandar நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட பெருக்கிற்கு கடுமையான மழையே காரணம் என பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான உதவி இயக்குனர் Sabarodzi Nor Ahmad தெரிவித்திருக்கிறார். நேற்று காலை 9 மணியளவில் இது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அங்கு தாங்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறினார். எனினும் Lata Iskandar நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட நீர் பெருக்கில் எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லையென Sabarodzi Nor Ahmad கூறினார்.

Kampar மற்றும் Tapah வில் பெய்த கடுமையான மழையினால் Lata Kinjang நீர் வீழ்ச்சி பகுதியிலும் நீர் பெருக்கு ஏற்பட்ட போதிலும் அங்கு வெள்ள பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டது. தாப்பா -கேமரன் மலை சாலையிலுள்ள Lata kinjang நீர் வீழ்ச்சியில் நீர் பெருக்கு ஏற்பட்டதை காட்டும் காணொளி இதற்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலானது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!