டோஹா, மே 14 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கட்டாருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் மூலம் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவைக்கான சாத்தியமான ஏற்றுமதியை மலேசியா பெற்றுள்ளதாக அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul Aziz தெரிவித்தார். நேற்றிரவு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் மலேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன், Qatar வாணிக தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட வட்ட மேஜை மாநாட்டில் ஏற்றுமதிக்கான இணக்கம் காணப்பட்டதாக Tengku Zafrul தெரிவித்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் சுமார் 500 மலேசியர்கள் கலந்துகொண்டனர். நமது தயாரிப்பு மற்றும் சேவைகளில் Qatar நிறுவனங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் கடப்பாட்டினால் பெரிய அளவிலான ஏற்றுமதியை நாம் பெற்றுள்ளோம் என Tengku Zafrul தெரிவித்தார். இது தவிர மேற்காசியாவின் சந்தைகளை மலேசியா அதிக அளவில் ஊடுருவ முடியும் என்றும் அவர் கூறினார்.