Latestமலேசியா

கணவரிடம் RM500,000 கொள்ளையிட மாற்று திறனாளியுடன் கூட்டுச் சேர்ந்த மனைவி

ஜோகூர் பாரு, மார்ச் 6 – தனது கணவரிடம் 500,000 ரிங்கிட்
கொள்ளையடிப்பதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான உள்நாட்டு பெண் ஒருவர் மாற்றுத் திறனாளி ஆடவருடன் கூட்டுச் சேர்ந்த குற்றத்தை ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பாசீர் கூடாங்கில் இக்குற்றத்தை புரிந்ததாக 53 வயதுடைய ஷாமின் பேகம் அப்துல் சைட் மற்றும் உடலின் ஒரு பகுதி செயல் இழந்த மாற்றுத் திறனாளியான 30 வயதுடைய முகமட் ரஷிட் அப்துல் சைட் ஆகியோர் மீது நீதிபதி டத்தோ சே வான் ஸைடி சே வான் இப்ராஹிம் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

பாசீர் கூடாங் வர்த்தக மையத்தில் பேங்க் இஸ்லாமிற்கு பின்புறம் கார் நிறுத்தும் இடத்தில் நண்பகல் 12 மணியளவில் அவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

குற்றச்சாட்டை மறுத்த அவ்விருவரும் 12 ,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு மீண்டும் ஏப்ரல் 8ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!