
கோலாலம்பூர், செப்டம்பர்-19,
அண்மையில் கம்போங் சுங்கை பாருவில் நடந்த கலகத்தில், தொடர்புடைய புதிய இரண்டு சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் காயமடைந்தது.
அச்சந்தேக நபர்களில் ஒருவருக்கு நீதிமன்றம் கடந்த வாரம் 1,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
விசாரணை ஆவணங்கள், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்படுவதாக கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசுப் ஜான் முகமட் தெரிவித்தார்.