Latestமலேசியா

கர்நாடகாவில் மனைவியை கொன்றதற்காக 1 1/2 ஆண்டு சிறையில் கணவன்; திடிரென உயிருடன் வந்த மனைவி

மைசூர், ஏப்ரல் 7 – 2020 ஆம் ஆண்டு தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் தற்போது உயிருடன் நீதிமன்றத்தில் ஆஜரான சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவி மல்லிகாவை கொலை செய்த கொலை வழக்கில் அவரது கணவரான சுரேஸ் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வேளையில் மல்லிகா நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கர்நாடாகத்தில் குடகு (Kodagu) மாவட்டத்தில் குஷால் (Kushal) நகரில் இருந்து மல்லிகா காணாமல்போனதாக கூறப்பட்டதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் அவருடைய கணவரான 38 வயதுடைய சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், பெட்டதரபுராவில் (Bettadarapura) ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டை போலீசார் கண்டுபிடித்து, அந்த எலும்புக்கூடு காணாமல்போன மல்லிகாவுடையது என்றும் , அவரை சுரேஷ்தான் கொலை செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, மல்லிகா வேறோரு ஆணுடன் மடிகேரியில் (Madikeri) இருப்பதை சுரேஷின் நண்பர் ஒருவர் கண்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதோடு மல்லிகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரித்தபோது, ​​அவர் ஓடிப்போய் வேறொருவரை மணந்ததை ஒப்புக்கொண்டதகவும் சுரேஷிற்கு என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார் அப்பெண். மடிகேரியிலிருந்து 25 மற்றும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில்தான் அப்பெண் வசித்து வந்தது கண்டறியப்பட்டுள்ள நிலையில், போலிசாரின் விசாரணை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!