பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 13 – சிலாங்கூர், கிள்ளான ஜெயாவில் சமயப்பள்ளி ஒன்றின் சுராவ் அருகில் கழிப்பறையில் இரு பெண்களைக் கத்தியால் தாக்கவிட்டுத் தலைமறைவாகிய, ஆசாமியை இன்று காவல்துறை கைது செய்தது.
காஜாங்கில் நண்பரின் வீட்டில் மறைந்திருந்த, அந்த 46 வயது ஆடவரை காவல்துறை மடக்கி பிடித்தாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான ஷாருல் நிஜாம் ஜாபர் (Shahrulnizam Ja’afar) தெரிவித்தார்.
இதனிடையே, அந்த ஆடவரைத் தடுப்புக் காவலில் வைக்கும் நடவடிக்கை பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி, நிகழ்ந்த அந்த கத்தி குத்துச் சம்பவத்தில் 52 வயது பெண் தலைமை ஆசிரியரும், 26 வயது விற்பனை பணிப்பெண்ணும் காயமுற்றனர்.