Latestமலேசியா

கழுத்து அறுக்கப்பட்ட காயத்துடன் மாணவி மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை

மலாக்கா, மே-26 – மலாக்கா ,பண்டார் ஹிலிரிலுள்ள வீட்டில் மாணவி ஒருவர் கழுத்தில் அறுக்கப்பட்ட காயத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட 14 வயதுடைய அந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.

தற்போது அவரது நிலை சீராக இருப்பதோடு அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Ngwe Hee Sem தெரிவித்தார்.

அந்த மாணவிக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ குழுவினர் அவரது மன உணர்வு மற்றும் உளவியல் விவகாரங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த மாணவி பதின்ம வயதுக்குட்பட்டவராக இருப்பதால் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை மதிப்பதுடன், இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தேவையற்ற ஆருடங்கள் கூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என Ngwe Hee Sem கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!