காஜாங், ஜூலை-4, சிலாங்கூர், காஜாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் husky ரக நாய் ஆடவரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தை, கால்நடை சேவைத் துறை (DVS) விசாரித்து வருகிறது.
நாயை பிடித்திழுக்கும் சட்டையில்லா ஆடவன், அதன் முகத்தில் சரமாரியாக அடிப்பது, வைரலாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.
தகவல் தெரிந்து தானும் மேலும் சிலரும் அந்த அடுக்குமாடி வீட்டுக்குச் சென்று நாயை தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டதாக, சுயேட்சை மீட்பாளரான ஷீமா ஆரிஸ் (Shima Aris) கூறினார்.
அவ்வாடவரும் முன்வந்து நாயை ஒப்படைக்க ஒப்புக் கொண்டார்.
வீடியோவில் Pomeranian வகை நாயும் இருந்தது; ஆனால் அதனை அவர் கொடுமைப்படுத்தியதற்கான் ஆதாரம் இல்லாததால, அதை விட்டு விட்டோம் என ஷீமா சொன்னார்.
மீட்கப்பட்ட husky நாய் தனியார் கால்நடை கிளினிக்கொன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறது; எனினும் அதனுடலில் இதுவரை காயங்கள் எதுவும் கண்டறிப்படவிலை.
நாய் இன்னும் பயத்தில் உள்ளதால், முரண்டுப் பிடிக்கிறது; இதனால் அதனை விரிவான சோதனைக்கு உட்படுத்த முடியவில்லை.
இதில் என்ன சோகமென்றால், நாயை தொட்டாலே அது சிறுநீர் கழித்து விடுகிறது; அந்த அளவுக்கு அதன் பாதிப்பு உள்ளது என ஷீமா தெரிவித்தார்.