Latestமலேசியா

காஜாங்கில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவன் கைது

காஜாங், ஆகஸ்ட் 21 —காஜாங் சுங்கை சுவா பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 41 வயது ஆடவனைப் போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் கடந்த மார்ச் 29ஆம் தேதி சிறுமியின் வீட்டில் நடந்ததாகவும், சந்தேக ஆடவன் சிறுமியின் குடும்பத்திற்கு தெரிந்தவர் என்றும் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 16ஆம் தேதி புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளி நேற்று கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங்கில் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும், அவ்வாடவனின் சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது உறுதியானதால், போதைப்பொருள் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!