ஷா அலாம், ஏப் 30 – காப்பாரில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு உள்ளூரைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று காப்பார் Taman Jaya வைச் சேர்ந்த அந்த வர்த்தகர் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். 25 மற்றும் 29 வயதுக்குட்பட்ட அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் சனிக்கிழமையும் மற்றொருவன் நேற்றும் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் போலீஸ தலைவர் S . Vijaya Rao கூறினார்.
முதல் சந்தேகப் பேர்வழி ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான். மற்றொரு நபரை தடுத்து வைப்பதற்கான உத்தரவு இன்று பெறப்படும் என வெளியிட்ட அறிக்கையில் Vijaya Rao தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கொல்லப்பட்டவரின் மனைவியும் பிள்ளையும் இருந்துள்ளனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு புதிய சாட்சிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். பழிவாங்கும் நோக்கத்தில் அந்த கொலை நடந்திருக்கலாம் என்பதோடு இதர சந்தேகப் பேர்வழிகள் தீவிரமாக தேடப்பட்டு வருவதாக Vijaya Rao தெரிவித்தார். பாராங் மற்றும் Taser guns வைத்திருந்த ஆயுதக் கும்பலால் 38 வயதுடைய அந்த வர்த்தகர் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. படுக்கை அறையில் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரது தலை, கால்கள்,தோள்பட்டை மற்றும் வலது கையிலும் காயங்கள் காணப்பட்டன.