பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30 – பஹாங், காராக் நெடுஞ்சாலையில், சிதறிக் கிடந்த ஆணிகளால், சுமார் 30 வாகனங்களின் சக்கரங்கள் ஓட்டையாகி பழுதடைந்துள்ளன.
பொறுப்பற்ற தரப்பினர் அச்செயலை புரிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
நேற்றிரவு மணி பத்து வாக்கில், காராக் நெடுஞ்சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்த வேளை ; அது தொடர்பான காணொளியை @mohdfaizlatiff என்பவர் தனது டிக் டொக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும், ஒரே மாதிரி ஆணி குத்தி டையர் வெடித்து பழுதடைந்திருப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பதிவின் கீழ், சமூக ஊடக பயனர்கள் பலரும் பல வகையிலான ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர்.
கட்டாயம் பொறுப்பற்ற தரப்பினரால் நியமிக்கப்பட்ட, நபரால் சாலையில் அந்த ஆணிகள் கொட்டப்பட்டிருக்கலாம். அதனால், அவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கப்பட வேண்டுமென சமூக ஊடக பயனர்கள் சினத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.