Latestமலேசியா

கால்வாயில் 3 மீட்டர் நீளம் முதலை பிடிபட்டது

கோத்தா கினபாலு, மே 25 – கோத்தா கினபாலு, Jalan Tun Fuad Stephensசிலுள்ள Taman Awam Teluk Likas சிலுள்ள ஒரு கால்வாய்க்குள் இருந்த மூன்று மீட்டர் நீளமுள்ள முதலை நேற்று நள்ளிரவில் பிடிபட்டது. பொது பூங்காவிற்கு அருகேயுள்ள கால்வாயை கடந்து சென்ற பலர் அங்கு அந்த முதலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததேடு இதுகுறித்து கோத்தா கினபாலு மாவட்ட பொது தற்காப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் ஒத்துழைப்போடு அந்த முதலையை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கயிற்றின் சுருக்கம் மற்றும் துணியின் உதவியோடு அந்த 180 கிலோ எடையைக் கொண்ட முதலை அரை மணி நேர போராட்டத்திற்குப் பின் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!