
ஹவனா, ஜூன்-9-திங்களன்று கியூபாவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடற்பரப்பில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமார் 20 வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகளுக்குப் பிறகு, குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருந்த கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் தீவின் மேற்கு முனையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும், காயங்கள் அல்லது பெரிய சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஹவானா உட்பட நாட்டின் மேற்குப் பகுதி முழுவதும் இந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக கியூபா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெரிய சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்க மையத்திற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அந்த மையம் நிராகரிக்கவில்லை.
தங்கள் கட்டிடங்கள் அதிர்ந்ததைத் தொடர்ந்து, ஹவானாவின் மையப்பகுதியில் உள்ள தெருக்களிலும் திறந்தவெளிகளிலும் குடியிருப்பாளர்கள் கூடினர்.



