
கோத்தா பாரு, அக்டோபர்-13,
கிளந்தான் Lembah Sireh-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காசா ஆதரவு படகு ஊர்வலத்தில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ், விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைவிலேயே விசாரணைக்கு அழைக்கப்படுவர் என, மாநில போலீஸ் தலைவர் Mohd Yusof Mamat கூறினார்.
அண்மையில் Global Sumud Flotilla தன்னார்வலர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைதுச் செய்யப்பட்ட சம்பவத்தை மீண்டும் நடித்துக் காட்டும் விதமாக, சம்பவத்தின் போது ஒரு படகில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்க விடப்பட்டன.
இதன் வீடியோக்கள் வரைலாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
Pertubuhan Anak Muda Bangkit Malaysia என்ற அமைப்பின் ஏற்பாட்டிலான அந்நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் பங்கேற்றனர்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் Kampung Pulau Pisang-கிலிருந்து Lembah Sireh வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகுகளில் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்