Latestமலேசியா

கிள்ளான் பண்டார் பொட்டானிக்கில் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 15 ஏக்கர் நிலத்தில் வர்த்தக கட்டிடங்களா?; அவற்றை இடிக்க முடிவு – கணபதிராவ்

கிள்ளான், ஜூன் 19 – கிள்ளான் பண்டார் பொட்டானிக் ( Bandar Botanik ) குடியிருப்பு பகுதிக்கு அருகே கூட்டரசு அரசாங்கம் பள்ளிகளுக்காக ஒதுக்கிய 15 ஏக்கர் நிலத்தில் வர்த்தக கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டதற்கு எதிராக பல மாத தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு அவற்றை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான் தெரிவித்தார். கூட்டரசு அரசாங்கம் பள்ளிகள் நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய அரசாங்கம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வாடகைக்கு வழங்கியதால் இந்த நிலத்தில் வர்த்தக ரீதியில் பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டதை தொடர்ந்து பண்டார் பொட்டானிக் குடியிருப்பு வாசிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார் செய்ததன் அடிப்படையில் நேற்று இம்முடிவு எடுக்கப்பட்டதாக கணபதிராவ் கூறினார்.

தற்போது அங்கு இரண்டு பெரிய மண்டபங்கள், புட்சால் மைதானம், மரத்தளவாடச் சாமான் மற்றும் உணவு அங்காடி கடைகள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் கட்ட வேண்டிய திட்டம் இருக்கும்போது நிரந்தர வடிவிலான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வந்தால் பள்ளிக்கூடங்கள் எப்படி கட்டப்படும் என இங்குள்ள மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இயற்கை வளம், நீடித்த சுற்றுச் சூழல் அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் சிங் தோ ( Ching Thoo ) நேற்று பண்டார் பொட்டானிக்கில் வாடகைக்கு விடப்பட்ட அந்நிலத்திற்கு வந்ததோடு அவரிடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கணபதி ராவ் தெரிவித்தார். இந்த சந்திப்பு கூட்டத்தில் போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஷமான் ஹூரி , ( Azmizam Zaman Huri, பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் டக் சீ ( Leong Tuck Chee ) செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ,கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் உதவியாளர் அஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர். இறுதியில் தனியார் நிறுவனத்திற்கு இந்த இடம் வாடகைக்கு வழங்கப்பட்டதற்கான அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்துச் செய்வது, தற்போது எழுப்பப்பட்ட கட்டிடங்களை உடைப்பது, மற்றும் அதற்கான நடவடிக்கையை கிள்ளான் மாநகர் மன்றத்திடம் விடுவது என இந்த கூட்டத்தில் உடனடியாக முடிவு எடுக்கப்பட்டதாக கணபதிராவ் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!