கோலாலம்பூர், மே 3 – Sadhana Bijaen என்ற குடும்ப மாதுவின் தாலி சங்கிலியைத் திருடியதாக Hasrul Bin Mustamin என்ற உள்ளூர் ஆடவன் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இரண்டு வாரத்திற்கு முன்பு Jalan Scott Brickfieldsசில் அனுமார் கோயிலுக்கு முன்புறம் 29 வயதுடைய Hasrul இக்குற்றத்தை புரிந்ததாக நீதிபதி Datin Fadzlin Suraya முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி காலை 11 மணியளவில் 45 வயதுடைய Sadhana Bijaenனுக்கு சொந்தமான தாலி சங்கிலியை Hasrul அபகரித்ததாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தான்.
எனினும் Hasrul தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தான். குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 14ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி ஆகியவை வழங்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 392 ஆவது பிரிவின் கீழ் அவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 12 ,000 ரிங்கிட் ஜாமினில் அவன் விடுவிக்கப்பட்டான். ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் வழக்கறிஞரை நியமிப்பதற்கும் இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் .