Latest
குளுவாங்கில் கூடைப்பந்து அரங்கில் 17 வயது இளைஞன் மீது மர்ம கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது

குளுவாங், அக்டோபர்-13,
ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு கூடைப்பந்து அரங்கில் 17 வயது மாணவன் காயமடையக் காரணமான கலவரம் தொடர்பில், 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் தன்னைத் தாக்கியதாக, பாதிக்கப்பட்ட மாணவன் போலீஸில் புகார் செய்தான்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், நேற்று மதியம் வாக்கில் 19 முதல் 21 வயதிலான 4 ஆடவர்களைக் கைதுச் செய்தனர்.
கலவரத்தில் இறங்கி காயம் விளைவித்ததன் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாக குளுவாங் போலீஸ் கூறியது.
அச்சம்பவத்தின் போது பதிவான 45 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.