Latestமலேசியா

குவாந்தானில் புதிய ஒருங்கிணைந்த பிரம்மாண்ட கண்காட்சி அரங்கைத் திறந்தது Fella Design & Ashley Furniture

குவாந்தான், ஜூன்-17 – கிழக்குக் கரை வாழ் வீட்டு அலங்காரப் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

மலேசியாவின் முன்னணி மரத் தளவாடங்கள் சில்லறை விற்பனையாளரான Fella Design, உலகப் புகழ்பெற்ற Ashley Furniture நிறுவனத்துடன் இணைந்து, பஹாங், குவாந்தானில் தங்களின் புதிய ஒருங்கிணைந்த பிரம்மாண்டக் கண்காட்சி அரங்கை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.

Jalan Teluk Sisek-கில் ஏற்கனவே இருந்த Fella Design தளம், தற்போது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு இந்த புதிய வடிவத்தைப் பெற்றுள்ளது.

Fella Design-னின் பிரத்யேக சோஃபா இரகங்களும், Ashley Furniture-ரின் உலகத்தரம் வாய்ந்த வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிழக்குக் கரை மக்களுக்குக் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

மலேசிய வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு வாழ்க்கை முறை மற்றும் பட்ஜெட்டுகளுக்கு ஏற்ப, அனைத்துலகத் தரம் வாய்ந்த மரத் தடவாடங்களை வழங்குவதே இந்தக் கூட்டு ஒத்துழைப்பின் நோக்கம் என்று Fella குழுமத்தின் தலைமை செயலதிகாரி யூ காங் சிங் (Yu Kong Cing) தெரிவித்தார்.

இந்த பிரம்மாண்டத் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், தற்பொழுது வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யேக சலுகைகள், கவர்ச்சிகரமான பரிசுகள் மற்றும் நிபுணர்களின் இலவச வீட்டு அலங்கார ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உங்கள் வீட்டைப் புதிய பொலிவுடன் அழகுபடுத்த நினைத்தால், இந்த புதிய ஒருங்கிணைந்த கண்காட்சி அரங்கு உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!