கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – நேற்று KLFA கால்பந்து மையத்தில் மூண்ட கைகலப்பில் கூர்மையான பொருளைக் கொண்டு தாக்க முயன்ற கால்பந்து வீரர் ஒருவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றது.
கால்பந்து போட்டியின் போது இரு குழுவினருக்கும் ஏற்பட்ட சண்டையில் சந்தேகிக்கப்படும் எதிர் அணியின் வீரர், கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு மற்றொரு வீரரைத் தக்க வந்திருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து, இன்று அதிகாலையில் 23 வயது ஆடவர் ஒருவரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதாக, வங்சா மாஜூ மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான முகமட் லாசிம் இஸ்மாயில் (Mohamad Lazim Ismail) தெரிவித்தார்.
எனினும், இச்சம்பவத்தில் எந்த காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
அரிப்பு, வெடிப் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958-யின் பிரிவு 6(1)-யின் கீழ் விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், அந்த சந்தேக நபரை காவல்துறை தேடி வருகிறது.