Latestமலேசியா

கெந்திங் மலையில் துணிகரம்: இரண்டே நிமிடங்களில் RM1.7 மில்லியன் நகைகளை அள்ளிச் சென்ற 3 கொள்ளையர்கள்

பெந்தோங், ஆகஸ்ட்-18-பஹாங், கெந்திங் மலையில் பிரபல பேரங்காடியில் ஒன்றில் அமைந்துள்ள தங்க நகைக்கடையில், வெறும் இரண்டே நிமிடங்களில் சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மூவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

​Sky Avenue வளாகத்தில் நேற்று காலை 11.40 மணியளவில் இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது.

​முகமூடி மற்றும் தொப்பி அணிந்து கடைக்குள் நுழைந்த மூன்று நபர்கள், கோடரி மற்றும் கம்பிகளைக் கொண்டு கண்ணாடிகளை உடைத்து நகைகளை அள்ளிச் சென்றதாக பஹாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் Azry Akmar Ayob தெரிவித்தார்.

​கொள்ளையடித்த உடனே அவர்கள் வாகனத்தில் ஏறி மலையடிவாரத்தை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.

​சம்பவத்தை அடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் Op Tutup தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு முன்னரே அவர்களது வாகனம் சோதனைச் சாவடியைக் கடந்துவிட்டது CCTV பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

​புக்கிட் அமான் மற்றும் பஹாங் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து கொள்ளையர்களைக் கைதுச் செய்ய தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!