
வாஷிங்டன், ஆகஸ்ட்-18-ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு இடையூறாக இருந்தால், ஓமான் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானும் ஓமானும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் மேற்பார்வையின்றி எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என்றும், ஈரான் உடனடியாக ‘சரணடைய’ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில்பேச்சுவார்த்தைக்கான 60 நாள் காலக்கெடு முடிவடைந்த நிலையில், அமெரிக்க கடற்படை ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஓமானுடன் இணைந்து போக்குவரத்து வரைபடத்தை இறுதிச் செய்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அழுத்தம் தொடர்ந்தால் வளைகுடா பகுதியில் பதற்றம் மேலும் தீவிரமடையும் என ஈரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



