Latestமலேசியா

கெலட் ஆண் யானைக்கு கண்களில் பிரச்னையா? தைப்பிங நகரான்மைக் கழகம் மறுப்பு

ஈப்போ, மே 14- ஜப்பானின் டென்னோஜி ( Tennoji ) மிருகக்காட்சிசாலையில் உள்ள கெலட் என்ற ஆண் யானைக்கு கண் பிரச்சனைகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தைப்பிங் நகரான்மைக் கழகம் மறுத்துள்ளது.

மாறாக, அந்த விலங்கின் கண்களைச் சுற்றி காணப்படும் மாற்றங்கள், மதம் பிடித்த பருவத்தில் ஏற்படும் நெற்றிச் சுரப்பிகளின் வீக்கத்தால் ஏற்படுகின்றன.

மதம் பிடித்த பருவம் என்பது வயதுவந்த ஆண் யானைகளுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிலையாகும். இது அந்த விலங்கில் மிக அதிக ஹார்மோன் மாற்றங்களை, குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் ( Testosteron) அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.

மதம் பிடித்த பருவத்தில் வயதுவந்த ஆண் யானைகளுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு இயற்கையான உடலியல் எதிர்வினையே இந்த நிலைக்குக் காரணம் என்று தைப்பிங் நகரான்மைக் கழக தலைவர் முகமது அக்மல் தஹலான் Mohamed Akmal Dahalan ) தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில், டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள், யானைகளை வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாகவோ, உணர்ச்சிவசப்படக்கூடியதாகவோ அல்லது முரட்டுத்தனமாக மாற்றக்கூடும்.

இந்த நிலை இயல்பானது மற்றும் விலங்குப் பராமரிப்பாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே தைப்பிங் உயிரியல் பூங்காவிலிருந்து ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கெலட் கண் பிரச்சினைகளால் அவதிப்படுகிறது என்ற கூற்று தவறானது என Mohamed Akhmal சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!