Latestஉலகம்

டயப்பரில் தங்கம் கடத்திய இந்திய பிரஜை கைது

ஜகார்த்தா, மே 14 – ஜகார்த்தாவிலுள்ள சுகர்னோ ஹாட்டா அனைத்துலக விமான நிலையம் வழியாக, 267.5 கிராம் தங்கத்தை ஒருமுறை பயன்படுத்தும் டயப்பரில் கடத்தியதாகக் கூறப்படும் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஐந்து மில்லியன் ரூபியா அல்லது சுமார் 1,120 ரிங்கிட் கட்டணத்திற்காக இந்த செயலை செய்ததை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டாக கூறப்பட்டது.

அந்த சந்தேக நபர் ஐந்து மில்லியன் ரூபியா அதாவது சுமார்1,120 ரிங்கிட் கட்டணத்தைப் பெற்றதை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அது வெறும் வாக்குறுதியாக மட்டுமே இருந்ததால் இன்னும் பணம் செலுத்தப்படவில்லை என்று சுகார்னோ ஹாட்டா விமான நிலையத்திலுள்ள இந்தோனேசிய சுங்கத் துறையின் தலைவர் ஹெங்கி டோமுவான் பால்லிண்டுங்கன் அரிதோனாங் (Hengky Tomuan Parlindungan Aritonang) தெரிவித்தார்.

மேலும் அந்த ஆடவர் இந்தோனேசியாவில் ஏழு நாட்கள் விடுமுறையை கழிப்பதற்கான பயணச்சீட்டும், ஜகார்த்தாவில் தங்குவதற்கான இடமும் வழங்கப்பட்டிருந்தது.

அந்த நபர் ஏழு நாட்கள் இந்தோனேசியாவில் தங்கியிருந்ததால் இது முன்கூட்டியே செய்ப்பட்ட ஏற்பாடா அல்லது விடுமுறைக்கு சென்றது உண்மையா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கத்தின் மதிப்பு 700 மில்லியன் ரூபியா அல்லது 156,857 ரிங்கிட்டாகும். அந்த ஆடவர் புதுடில்லிக்கு செல்வதற்காக சிங்கப்பூருக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!