
பத்து பாஹாட், மே 13 – இன்று அதிகாலை யோங் பெங் (Yong Peng) அருகே வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் சென்ற அதிவேக பேருந்து ஒன்று சாலைப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தில் மோதியதில், பேருந்து ஓட்டுநர் உட்பட நால்வர் கடுமையாகக் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் மூன்று பயணிகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பேருந்தில் இருந்த 20 பயணிகள் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அவசர அழைப்பு கிடைத்ததும், யோங் பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 10 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மீட்புப் பணியின்போது, சிறப்பு கருவிகளின் உதவியுடன் சிக்கியிருந்த காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, பின்னர் அவசர மருத்துவ சேவை மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.



