Latestமலேசியா

கேமரன் மலையில் வெளிநாட்டவர்கள் ஆக்கிரமிப்பு – பஹாங் சுல்தான் கவலை

குவந்தான், ஜூலை 30- கேமரன் மலையில் அளவுக்கு அதிகமாக வெளிநாட்டினர் ஆக்கிரமித்திருப்பது குறித்து மேன்மை தங்கிய பஹாங் சுல்தான் அல்சுல்தான் அப்துல்லா கவலையை தெரிவித்திருக்கிறார். சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்துவரும் நன்னெறி பண்புகள் குறைந்ததே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

தற்போது விவசாய தொழில்துறையில் உற்பத்தியையும் விலையையும் கட்டுப்படுத்தும் முதலாளிகளாக கேமரன் மலையில் உள்ள வெளிநாட்டினர் திகழ்கின்றனர். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்ட குழுவாகவும் அவர்கள் செயல்படுவதாக அல்சுல்தான் அப்துல்லா தெரிவித்தார்.

கேமரன் மலையில் விவசாய நிலங்களை அதன் உரி மையாளர்கள் வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர். லட்சக்கணக்கான ரிங்கிட் பணத்திற்கு ஆசைப்பட்டு நேர்மையை அடகுவைத்து அங்குள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலைத்தை வெளிநாட்டினரிடம் தாரைவாக்கும் நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மாநில அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமது 65ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இஸ்தானா அப்துல் அஸிஸில் பஹாங் மாநிலத்தின் உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அல்சுல்தான் அப்துல்லா இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!