புது டெல்லி, ஜூலை 18 – இந்தியா, கேரளாவிலுள்ள, அரசாங்க மருத்துவமனை ஒன்றின் மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட ஆடவர் ஒருவர், இரு நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
எனினும், 59 வயது நவீந்தர் நாயர் எனும் அந்த ஆடவர், பரபரப்பான மருத்துவமனையின் மின்தூக்கியில் சிக்கிக் கொண்டிருந்ததை, அங்கிருந்த யாருமே அறிந்திருக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.
கடந்த சனிக்கிழமை, சுகாதார பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக, மருத்துவமனையின் மேல்மாடிக்கு செல்ல மின்தூக்கியில் ஏறியுள்ளார் நவீந்தர்.
எனினும், அந்த மின்தூக்கி கீழ் நோக்கி சென்றதோடு, திடீரென செயலிழந்தது.
இரு மாடிகளுக்கு நடுவில் அந்த மின் தூக்கி செயலிழந்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால், விளக்கு மற்றும் கற்றாடி இல்லாத அந்த மின்தூக்கியிலேயே ரவீந்தர் சிக்கிக் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அவசர சமிக்ஞை ஒலியை எழுப்பிய போதும், ரவீந்தருக்கு யாரும் உதவ வரவில்லை.
எனினும், நேற்று முன்தினம் வழக்கமான சோதனை நடவடிக்கைக்கு வந்த தொழிலாளர் ஒருவரால் ரவீந்தர் மீட்கப்பட்டார்.
ரவீந்தரை காணவில்லை என அவரது மனைவி போலீஸ் புகார் செய்ததும் குறிப்பிடத்தக்கது.