கோலாலம்பூர், மே 17 – ஜோகூர் பாருவிலுள்ள Ulu Thiram போலீஸ் நிலையத்தின் மீது இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களும் இரு ஆண்டுகளுக்கு முன்னர்தான போலீஸ் படையில் இணைந்தனர். Ahmad Azza Fahmi Azhar மற்றும் Syafiq Ahmad Said ஆகிய இரண்டு போலீஸ் கான்ஸ்டபில்களும் Ulu Thiram போலீஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு ரோந்து பிரிவில் பணியாற்றி வந்தனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு போலீஸ் படை தலைவர் Razarudin Husain. போலீஸ் படைத் துணைத் தலைவர் Ayob Khan Mydin Pitchay மற்றும் போலீஸ் படையின் இதர உறுப்பினர்களும் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும் என முகநூலில் போலீஸ் படையின் இதர உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை மணி 2.45 அளவில் முகமூடி அணிந்த ஆடவன் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் பாராங் கத்தியினால் தாக்குதல் நடத்தியபோது இரு போலீஸ்காரர்களை கொன்றதோடு மேலும் ஒருவருக்கு காயம் விளைவித்தான். எனினும் போலீஸ்காரர்கள் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். 30 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபரிமிருந்து Walther P99 துப்பாக்கி மற்றும் HK MP5 துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.