Latestமலேசியா

கோத்தா திங்கியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியது 14 வயது மாணவன் மரணம்

கோத்தா திங்கி, மே 10 – கோத்தா திங்கி, Jalan Bandar Penawar Punggai யில் 1. 0 கிலோமீட்டரில் மாணவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு காரில் நேருக்கு நேர் மோதி வித்துக்குள்ளானதில் அந்த மாணவன் மரணம் அடைந்தான். இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 14 வயதுடைய அந்த மாணவன் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தான். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு 14 வயது மாணவன் கையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் என கோத்தா திங்கி OCPD Superintendent Hussin Zamors தெரிவித்தார்.

இந்த விபத்தில் கார் ஓட்டுனரான 22 வயது பெண் காயம் எதுவும் அடைவில்லை. கவனக்குறைவாக கார் ஓட்டி மரணம் ஏற்படுத்திய 1977 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 ஆவது விதி (உட்பிரிவு 1 இன்) கீழ் அந்த பெண் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Hussin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!