
கோத்தா பாரு, ஜூன்-8-இன்று மதியம் மணி 12.30 க்கு கோத்தா பாரு,
ஜாலான் கம்போங் சீனாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் அழிந்தன.
இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லையென தீ மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை அதிகாரி, வான் முகமட் ஜைன் வான் யூசோப் ( Wan Mohd Zain Wan Yusof) தெரிவித்தார்.
கோத்தா பாரு மற்றும் கோத்தா டாருல் நய்ம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என 18 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அங்கு சென்றடைந்தபோது 10 குடியிருப்பு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதனை அனைக்கும் முயற்சிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த பேரிடருக்கான காரணம் மற்றும் இழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வான் முகமட் ஜைன் கூறினார்.



