உலு சிலாங்கூர், மே 10 – கோலகுபுபாரு மாநிலச் சட்டப் பேரவையில் உள்ள வாக்காளர்கள், மலேசிய குடிமக்களாக தங்களின் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நாளை சனிக்கிழமை வாக்களிக்க செல்லுங்கள் என்று நினைவூட்டியுள்ளார் தொழில் முனைவர் மற்றும் மேம்பாட்டு கூட்டுறவுத் துணையமைச்சர் ரமணன்.
இடைத்தேர்தலை புறக்கணிக்க வாக்காளர்களை, குறிப்பாக இந்தியர்களைத் தூண்டும் முயற்சிகளில் திளைக்க வேண்டாம் என்று கெஅடிலான் தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ரமணன், தெரிவித்தார்.
அத்தூண்டுதல்கள் அவதூறானது மற்றும் தீங்கிழைக்கும் செயலாகும். அவை இன ஒற்றுமையை மட்டுமே பிரிக்க விரும்பும் பொறுப்பற்ற செயல்கள்.
இவைகளை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் கருத்தில் கொண்டு குழப்பமடைய மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகக் அவர் கூறினார்.
இதனிடையே, நேற்று பத்தாங்காலியில் Tekun Nasional ஏற்பாடு செய்த Goes Big Indian Community Entrepreneur Financing Scheme-யின் விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் SPUMI குறித்தும் விளக்கமளித்தார்.
SPUMI இந்திய சமூகத்தை தொழில் முனைவர் வழி மேம்படுத்தவும், உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த சமுதாயமாக உருவாக்கம் ஒரு திட்டம் என விளக்கினார் டத்தோ ரமணன்.
இந்த திட்டத்தின் வழி, இந்தியர்கள் தொழில் முனைவர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.