Latestமலேசியா

கோலாலம்பூரின் ஜிம்களுக்கான உரிமக் கட்டணம் 80% குறைப்பு; வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்க அமைச்சர் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச்-4-கோலாலம்பூரில் செயல்படும் உடற்பயிற்சி மையங்களுக்கான உரிமக் கட்டணத்தில் 80 விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதால், அந்தச் சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கும் வழங்குமாறு கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ ஜிம் நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்பு ஒரு சதுர மீட்டருக்கு 50 ரிங்கிட்டாக வசூலிக்கப்பட்ட உரிமக் கட்டணம் தற்போது 10 ரிங்கிட்டுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, ஜிம் தொழிலை மேலும் ஊக்குவிப்பதையும், பொது மக்கள் அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, இந்த கட்டணக் குறைப்பால் ஜிம் நிர்வாகிகளுக்கு மிச்சமாகும் செலவை, உறுப்பினர் கட்டண தள்ளுபடி அல்லது சிறப்பு சலுகைகளாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என ஹானா வலியுறுத்தினார்.

தவிர, முதியவர்கள் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் பொது மக்களுக்கு மலிவான கட்டணத்தில் உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதும் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கை, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு, ஜிம் தொழில்துறைக்கும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!